F5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் போக்கோ நிறுவனம்

 
poco f5

போக்கோ நிறுவனம் F5 சீரிஸ் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் இறங்கியுள்ள நிலையில், அது தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. 

போக்கோ சீனாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ஒரு செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் சியோமி ஆகும். போக்கோ ஸ்மாட்போன்கள் இந்திய சந்தையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளது. கம்மியான விலையில், ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து ஏராளமான வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது போக்கோ நிறுவனம். இதேபோல் போக்கோ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், போக்கோ நிறுவனம்  போக்கோ F5 சீரிஸ் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. போக்கோ F5 5ஜி மற்றும் போக்கோ F5 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் வெளிவரவுள்ளன. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

poco f5


 
போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்: 

போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புதிய போக்கோ F5 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14ஐ கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் என்எஃப்சி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், டூயல் சிம், ஏழு 5ஜி பேண்ட்கள், IR பிளாஸ்டர் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படவுள்ளது.