ChatGPT Plusக்கான கட்டண சந்தா இந்தியாவிலும் அறிமுகம்.. மாத சந்தா எவ்வளவு தெரியுமா??

 
OpenAI -  ChatGPT

ChatGPT Plus தளத்தின் பயன்பாட்டுக்கான கட்டண சந்தா இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

OpenAI நிறுவனமானது  ChatGPT எனப்படும் மனிதனைப் போலவே பதிலளிக்கக் கூடிய ஒரு புதிய சார் போட்டு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு இருந்த GPT-3.5  தொழில்நுட்பத்தின் அடிப்படையில்  ChatGPT- 4 எனும்  மேம்படுத்தப்பட்ட வெர்ஷனும் அண்மையில்  அறிமுகப்படுத்தப்பட்டது.  படைப்பாற்றல், காட்சிப் புரிதல், சூழலுக்கு தகுந்தவாறு ஆகச்சிறந்த பதில்களை வழங்குதல் போன்ற பல்வேறு  வகையான அம்சங்களை உள்ளடக்கியது இந்த சாட்போர்டு.  இந்த   GPT-4 தளமானது இதற்கு முன்பிருந்த AI விட கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்டது.  

OpenAI

இந்த அப்டேட்டட் வெர்ஷன்  ChatGPT-4 இசை, திரைக்கதைகள் மற்றும் கம்ப்யூட்ட கோடிங் அளவுக்கு படைப்புத் திட்டங்களை உருவாக்க உதவுகிறது. இந்த சாட் போர்டானது முதலில்  கட்டணத்துடன் கூடிய பயன்பாடு, கட்டணமிலா பயன்பாடு என இரண்டு விதங்களில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் இதுவரையில் இலவசப் பயன்பாடு மட்டுமே இருந்து வந்தது.

இந்த நிலையில், OpenAI உருவாக்கியுள்ள ChatGPT Plus தளத்தின் பயன்பாட்டுக்கான கட்டண சந்தா இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக OpenAI நிறுவனம் தனது   அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில், “அட்டகாசமான செய்தி! ChatGPT Plus சந்தாக்கள் இப்போது இந்தியாவில் கிடைக்கின்றன. இன்றே GPT-4 உட்பட புதிய அம்சங்களை பெற்றுக்கொள்ளுங்கள் : chat.openai.com” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ChatGPT Plus  கட்டணம் மாதத்திற்கு தோராயமாக ரூ. 1,650 (US$ 20) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

OpenAI - Chat GPT
ChatGPT பிளஸ் என்பது ChatGPTக்கான புதிய சந்தா திட்டம் ஆகும். அதிலும், இதில்  மற்ற பயனர்களைக் காட்டிலும் முன்கூட்டிய  புதிய அம்சங்களைப் பெறமுடியும்.  சாட் போர்டு பதிலளிக்கும் வேகமும் அதிகமாக இருக்கும்.  எதிர்காலத்தில்,  GPT-4 பயன்பாட்டிற்கான தேவை அதிகமாக இருக்கும் என்பதால், எதிர்காலத்தில் சந்தா கட்டணமும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. ChatGPT Plus சந்தா பெறாதவர்களுக்கு, இலவச GPT-4 பதிலளிப்பு அம்சங்களை தொடர்ந்து வழங்கவும்  OpenAI நிறுவனம்  திட்டமிட்டுள்ளது. சில பயனர்களுக்கு மட்டுமே ஜிபிடி-4 சந்தா  கிடைக்கப்பெறும் நிலையில், விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.