வெளியானது அறிவிப்பு! Oppo Reno 8 pro விலை இதுதானா ?

 
oppo reno 8 pro

Oppo Reno 8 pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் வருகிற 18ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

ஓப்போ சீனாவை சேர்ந்த பிரபல எலக்ட்ரானிக் மற்றும் செல்போன் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் தனக்கென மிகப்பெரிய சந்தையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஓப்போ நிறுவனத்தின் செல்போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதுவரை ஏராளமான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ள ஓப்போ நிறுவனம் தற்போது ரெனோ 8  pro ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. வருகிற 18ம் தேதி ஓப்போவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வெளியிட்டு விழா நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெளியீட்டு விழாவை முன்னிட்டு ஓப்போ ரெனோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் கடந்த மே மாதம் வெளியானது. அதாவது இந்திய மதிப்பில் 41,500 ரூபாய்க்கு( 12ஜிபி+256ஜிபி) விற்பனை செய்யப்பட்டது. 

oppo

இந்நிலையில், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 52,990 ரூபாய் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.  டைமன்சிட்டி 8100 SOC பிராசஸருடன் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், 6.62 இஞ்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது 50 மெகாபிக்சல் கொண்ட ஒரு பிரைமரி கேமராவும், 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட 2 சென்சார் கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் 4,500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.