நாளை அறிமுகமாகிறது நத்திங் போன் (1) - விலை எவ்வளவு தெரியுமா ?

 
nothing phone 1

நத்திங் போன் (1) இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. 

இந்தியாவில் ஐபோனுக்கு அடுத்த படியான ரிச் பிராண்டாக கருதப்படும் ஒன்பிளஸ் பிராண்டை கார்ல் பெய் மற்றும் பீட் லாவ் ஆகியோர் இணைந்து 2013ஆம் ஆண்டு உருவாகினர். இந்நிலையில் கார்ல் பெய்ய் 2020ல் ஓன்பிளஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறி நத்திங் என்ற நிறுவனத்தை உருவாகினார். இந்நிறுவனம் ஏற்கனவே ப்ளூடூத் இயர் அறிமுகம் செய்து வெற்றிக் கண்ட நிலையில் தற்போது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி நத்திங் போன் (1) என்ற மாடலை வருகிற 12ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்த அந்நிறுவனம், நத்திங் போன் (1) தொடர்பான ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டது. இந்த வீடியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,  நாளை இரவு 8.30 மணி அளவில் இந்த செல்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

Nothing phone (1)

இந்நிலையில், நத்திங் போன் (1) ஸ்டார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ப்39 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து தொடங்கலாம் என கூறப்படுகிறது. நத்திங் போன் (1) மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 778 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம், 4500mAh பேட்டரி மற்றும் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதேபோல்  33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த செல்போனின் பின்பக்கத்தில் எடுக்க 50MP பிரைமரி கேமராவுடன், கூடுதலாக மற்றொரு சென்சார் கேமரா உள்ளது. இதேபோல் முன்பக்கத்தில் 16MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான இயங்குதளம் உள்ளது. மேலும் விழிப்பூட்டல்களுக்காக பின்பக்க பேனலில் லைட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.