Unknown Callers-க்கு குட் பை...வாட்ஸ் அப்பில் வரவுள்ள புதிய வசதி!

 
whatsapp

வாட்ஸ் அப்பில், காண்டாக்ட்-இல் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யும் வசதி மெட்டா நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது. 

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும்.  2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.  இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர். உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

silence mode

இந்நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ் ஆப் அழைப்புகளில் புதிய வசதியை கொண்டுவரவுள்ளது. அதாவது வாட்ஸ்அப் காண்டாக்ட்-இல் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யும் வசதி வழங்கப்படவுள்ளது.  "Silence Unknown Callers" என்ற பெயரில் புதிய அம்சத்தை வழங்க இருக்கிறது. இதன் மூலம் நம்முடைய காண்டக்டில் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யலாம்.  இந்த அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பின்னர் இது டெஸ்டிங்-கிற்கு வழங்கப்படும். இதனை தொடர்ந்து இந்த வசதி முதல்கட்டமாக ஆண்ட்ராய்டு செல்போன்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.