அசத்தல்! அறிமுகமானது லாவா அக்னி 2 5G - விற்பனை எப்போது தெரியுமா?

 
LAVA Agni 2 5G

லாவா நிறுவனத்தின் புதிய அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

லாவா இந்தியாவின் நொய்டாவை தலைமையிடமாக கொண்ட செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 2099ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். லாவா நிறுவனம் ஏராளமான ஸ்மார்ட்போன்களை இதுவரை அறிமுகம் செய்துள்ளன. இதேபோல் லாவா செல்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், லாவா நிறுவனத்தின் புதிய அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விற்பனை மே 24 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் தொடங்குகிறது.

LAVA Agni 2 5G

சிறப்பம்சங்கள் :

இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் FHD+ dual curved AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 13 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது.  இத்துடன் 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட உள்ளது. 50MP குவாட் கேமரா செட்டப் கொண்டிருக்கும் அக்னி 2 5ஜி மாடலில் 4700 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதேபோல் 16MP செல்ஃபி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் யுஎஸ்பி டைப் சி உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.