இந்தியாவில் அறிமுகமானது iQoo Z7s 5G - இத்தனை சிறப்பம்சங்களா?

 
iQoo Z7s 5G

இந்தியாவில் iQoo Z7s 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

iQoo சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2019ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் விவோ ஆகும். இந்தியாவில் தற்போது iQoo  தனக்கென்று தனி அடையாளத்தை பிடித்துள்ளது.. iQoo செல்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இதேபோல் இந்த நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. iQoo செல்போன்களில் இதுவரை ஏராளமான மாடல்கள் வந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் Z சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், iQoo Z7s 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

iQoo Z7s 5G

iQoo Z7s 5G சிறப்பம்சங்கள் : 

இந்த ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13 வழங்கப்பட்டுள்ளதோடு,  இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 64MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் செல்ஃபி எடுக்க 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி,  சென்சார் டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், 3.5mm ஆடியோ ஜாக், 5ஜி , டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.