T வடிவிலான இருதிரை கொண்ட எல்ஜியின் ”விங்” ஸ்மார்ட்போன் அறிமுகம்” !

 

T வடிவிலான இருதிரை கொண்ட எல்ஜியின் ”விங்” ஸ்மார்ட்போன் அறிமுகம்” !

T வடிவிலான இரட்டை திரை கொண்ட புதுமையான ”விங்” ஸ்மார்ட்போனை எல்ஜி நிறுவனம், இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சமே அதன் திரைகள் தான். அதாவது ஆங்கில எழுத்தான T வடிவில் இந்த போனில் இரு திரைகள் இருக்கும். ஒன்று அகலமாகவும் ஒன்று செங்குத்தாகவும் இருக்கும். ஒரே நேரத்தில் வீடியோ பார்த்துக்கொண்டே மற்றொரு பணிகளை வேறொரு திரையில் செய்யும் வகையில் இந்த புதுமையான போன் தயாரிக்கப்பட்டுள்ளது. திரைகளை சுழற்றக்கூடிய வகையில் வந்துள்ள இந்த போனை இந்தியாவில் 69,990 ரூபாய்க்கு எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

T வடிவிலான இருதிரை கொண்ட எல்ஜியின் ”விங்” ஸ்மார்ட்போன் அறிமுகம்” !

இந்த போன் 5 ஜி சப்போர்ட் கொண்டதாகவும், ஆண்டிராய்ட் 10 இயங்குதளம், 6.8 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூசன் கொண்ட பி ஒல்இடி கொண்ட பிரதான திரையும், 3,9 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி பேனல் கொண்ட இரண்டாவது திரையும் இதில் உள்ளநு. மேலும் ஸ்நாப்டிராகன் 765ஜி எஸ்ஒசி பிராசசர், மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட இந்த போனில் கேமரா வசதிகளும் சிறப்பாகவே உள்ளன.

பின்புறத்தில் 64 எம்.பி பிரதான கேமராவுடன், 13 மற்றும் 12 மெகா பிக்சல் என மொத்தம் மூன்று கேமராக்களும் கொண்டிருக்கிறது. முன்புறத்தில் செல்பி கேமராவாக பாப் அப் வடிவில் 32 மெகா பிக்சல் கேமரா உள்ளது. மேலும் மெமரியை பொருத்தவரை 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இருவேறு மெமரி அளவுகளில் வரும் இந்த போனில் மெமரியை 2 டெரா பைட் வரை நீட்டித்துக்கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

T வடிவிலான இருதிரை கொண்ட எல்ஜியின் ”விங்” ஸ்மார்ட்போன் அறிமுகம்” !

இந்த போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. மேலும் வைபை, புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப் சி போர்ட், 4ஜி மற்றும் 5 ஜி வசதி, திரையிலேயே விரல் ரேகை பதிவு செய்யும் சென்சார் என சகல சிறப்பம்சங்களுடன் வந்துள்ள இந்த போன் இந்தியாவில், வரும் 9ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்