அசத்தல்! ஐபோன் 14 மாடல்கள் அறிமுகமாகின - விற்பனை எப்போது தெரியுமா?

 
iphone 14 max

உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஐபோன் 14 மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபோன் 14 மாடல்கள் செப்டம்பர் 7ம் தேதி முதல் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்து வைத்தார்.  

ஐபோன் 14 சிறப்பம்சங்கள்


ஏ15 பயோனிக் சிப் ப்ராசசர் உள்ளது. ஐபி 68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் கொடுக்கப்பட்டுளது. பின்பக்கத்தில் இரண்டு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 12எம்பி +12 எம்.பி இரண்டு கேமாக்கள் உள்ளன. இதேபோல்  12 எம்பி செல்ஃபி கேமிரா  உள்ளது.  6.1 இன்ச் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில்,  விபத்து அறிவிப்பு வசதி, எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதி உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. ஐபோன் 14 ஆரம்ப விலை  79,000 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 14 ப்ளஸ் மாடலில் ஐபோன் 14-இல் உள்ள அனைத்து வசதிகளுடன் கூடுதலாக 6.7 இன்ச் டிஸ்பிளேவுடன் வெளியாகிறது. இதன் ஆரம்ப விலை  89,900 ரூபாய் என விலை  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

iphone 14


ஐபோன் 14 ப்ரோ சிறப்பம்சங்கள்


ஏ16 பயோனிக் சிப் ப்ராசசர் உள்ளது. ஐபி68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் உள்ளது. இதேபோல் இந்த மாடலிலும் பின்பக்கத்தில் இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 48எம்பி + 12எம்.பி  என இரண்டு கேமராக்கள் உள்ளன. இதேபோல் முன்பக்கத்தில் 12 எம்பி எல்ஃபி கேமிரா
கொடுக்கப்பட்டுள்ளது. 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்பிளே கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் விபத்து அறிவிப்பு வசதி மற்றும் 
எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதியும் உள்ளது.  30 நிமிடத்தில் 50 சதவிகிதம் சார்ஜ் 1 டிபி சேமிப்பு வசதி உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.  இதன் ஆரம்ப விலை 
1,29,000 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் ஐபோன் 14 ப்ரோவில் உள்ள அனைத்து வசதிகளுடன் கூடுதலாக 6.7 இன்ச் டிஸ்பிளேவுடன் வெளியாகிறது. இதன் ஆரம்ப விலை 1,39,900 ரூபாயாகும். இந்த மாடல்கள் அனைத்தும் நாளைமுதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், செப்டம்பர் 16 முதல் சந்தைகளில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.