ஐபோன் 14 Max விலை இவ்வளவு தானா ? இணையத்தில் கசிந்த தகவல்

 
iphone 14 max

ஐபோன் 14 Max செல்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ள நிலையில், இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆப்பிள் ஐபோன் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆடம்பரம் மற்றும் கௌரவம்தான். இந்த செல்போனை வைத்திருப்பவர்கள் சமூகத்தில் ஒரு மதிப்புள்ளவராக கருதப்படும் அளவிற்கு இந்த போனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் இதுவரை ஐபோனில் பல்வேறு மாடல்கள் வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஐபோன் 14 Max குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது ஐபோன் 14 Max செல்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. ஐபோன் 14 Max செல்போன் இந்த வருட இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், இணையத்தில் கசிந்துள்ள தகவலால் வாடிக்கையாளர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இணையத்தில் கசிந்த தகவலின் படி 6GB RAM + 128GB storage கொண்ட ஐபோன் 14 Maxன் விலை 69,600 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  ஐபோன் 13 pro 77,300($999) ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. மேலும் ஐபோன் 14 நான்கு மாடல்களில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது  ஐபோன் 14, ஐபோன் 14 Pro, ஐபோன் 14 Max மற்றும் ஐபோன் 14 Pro Max ஆகிய 4 மாடல்களில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இருந்த போதிலும் இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் சார்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. 

Iphone 14 max

ஐபோன் 14 Max செல்போனின் சிறப்பம்சங்கள் வருமாறு: 6.68-inch நீளம் கொண்ட flexible OLED தொடுதிரை வசதியுடன் வடிவமைக்கபட்டுள்ள இந்த செல்போனில் 90Hz refresh rateம் உள்ளது. இந்த மாடல் செல்போனின் பின்பக்கத்தில் இரண்டு கேமராக்கல் பொறுத்தப்பட்டுள்ளது. அது 12 மெகாபிக்சல் கேமராவாக இருக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. Face ID recognition வசதியும் இந்த மாடலில் உள்ளது. மேலும் சில சிறப்பசங்கள் ஐபோன் 13 மற்றும் ஐபோன் SE(2022)ஐ போன்று இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.