பிப்.17ல் பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்
Feb 9, 2024, 12:12 IST1707460955435
ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் வரும் 17-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைகோளுடன் பாய்கிறது ராக்கெட். 2,275 கிலோ எடை உள்ள செயற்கைகோளில் 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 ஆய்வுக் கருவிகள் உள்ளன.
புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலை தகவல்களை துல்லியமாக வழங்க இந்த செயற்கைக்கோள்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.