இந்த விதமான ’வாட்ஸ் ஆப்’களால் ஆபத்து - எச்சரிக்கும் வாட்ஸ் ஆப் நிறுவனம்

 
whatsapp

கூகுள் பிளே ஸ்டோரை தவிர வெளியில் இருந்து வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்க வேண்டாம் என்றும், அதன் மூலம் உங்களது தகவல்கள் திருடப்படலாம் எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும்.  2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் ஆவர். இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர். உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.  பயனாளர்களை கவரும் நோக்கத்தில் வாட்ஸப் நிறுவனம் அவ்வபோது தனது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோரை தவிர வெளியில் இருந்து வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்க வேண்டாம் என்றும், அதன் மூலம் உங்களது தகவல்கள் திருடப்படலாம் எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

whatsapp

இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள வில் கேத்கார்ட் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கூகுள் பிளே ஸ்டோரை தவிர வெளியில் இருந்து வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்க வேண்டாம் என்றும், அதன் மூலம் உங்களது தகவல்கள் திருடப்படலாம். அந்த செயலிகள் பதிவிறக்கும் போது, பாதிப்புகள் இல்லாதவையாக தோன்றலாம் ஆனால், வாட்ஸ் ஆப்பில் இருப்பது போன்ற பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்கள் அதில் இல்லை. இதனால் பயனர்கள் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.
 

whatsapp ban

ஹேமோட்ஸ் என்ற டெவலப்பரிடமிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலிகளில் மறைந்திருக்கும் மால்வேர்களை தங்களது குழு கண்டுபிடித்துள்ளது. அந்த டெவலப்பர் தொடர்ச்சியான நாக்-ஆப் பயன்பாடுகளை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்று தான் ஹே வாட்ஸ்அப். அதிகாரப்பூர்வ வாட்ஸ் ஆப்பில் இல்லாத சில அம்சங்கள் தான், மக்களை இதுபோன்ற போலி ஆப்களுக்குள் இழுக்கின்றன. இவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்தால், உங்களது அனுமதியின்றி தனிப்பட்ட தகவல்களை திருடிவிடுவார்கள். பயனர்கள் ஆண்ட்ராய்டின் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரில் இருந்து வெளியில் சென்று வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளை பதிவிறக்காமல் இருப்பதே இதற்கு தீர்வு. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.