சாம்சங்கில் 2 ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் - முன்பதிவு செய்வோருக்கு அசத்தலான சலுகை!

 
fold mobiles

சாம்சங் நிறுவனம் இரண்டு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை வருகிற 10ம் தேதி அறிமுகம் செய்யவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. 

செல்போன்கள் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று தற்போது மடக்கி வைக்கும் அளவிற்கு புதிய அவதாரம் எடுத்துள்ளன. பல்வேறு முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஃபோல்டபிள் போன்களை வடிவமைத்து வருகின்றன. இதேபோல் சாம்சங் நிறுவனமும் ஃபோல்டபிள் ஸ்டார்ட்போன்களை வடிவமைத்து சந்தைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் Z ப்ளிப் 4 போல்டபில் ஸ்மார்ட்போன் மாடல்களை ஆகஸ்ட் 10 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்கிறது. 

fold mobiles

இதனை முன்னிட்டு சாம்சங் நிறுவனம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. மேலும் முன்பதிவு செய்பவர்களுக்கு அசத்தலான சலுகைகளையும் வழங்கியுள்ளது சாம்சங் நிறுவனம். 1999 ரூபாய் செலுத்தி கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஆகிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்வோருக்கு 5 ஆயிரம் வரையிலான சலூகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வருகிற 10ம் தேதி மாலை 6.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன், ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் 
பிளாக், கிரீம்/பெய்க்,லைட் புளூ, போரா பர்பில் மற்றும் கிரே உள்ளிட்ட வண்ணங்களில் வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை சுமார் 1 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.  இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்புபவர்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.