விரைவில் ஒப்போ ரெனோ 9 சீரிஸ்...சிறப்பம்சங்கள் இதுதான்!

 
oppo reno 9 series

ஒப்போவில் ரெனோ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

ஒப்போ சீனாவின் டாங்குவான் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். ஸ்மார்ட்போன்களுக்கான இந்திய சந்தையில் ஓப்போ முன்னணியில் உள்ளது. ஓப்போ ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அவ்வபோது புதிய ஸ்மாட்போன்களை அறிமுகம் செய்து வரும் இந்நிறுவனம் விரைவில் ஓப்போ ரெனோ 9 சீரிஸில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. கடந்தாண்டு ரெரேனா 8 ப்ரோ ப்ளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதிதாக ரெனோ 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 
இந்த சீரிஸில் ரெனோ 9, ரெனோ 9 ப்ரோ மற்றும் ரெனோ 9 ப்ரோ ப்ளஸ் 5ஜி ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் வருகின்றன.இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.  அதன்படி, இந்த ஸ்மார்ட்போன்களீல் 6.7 இன்ச் OLED டிஸ்பிளே இருக்கலாம் என்றும், ஸ்னாப்டிராகன் 8 ப்ளஸ் ஜென் 1 பிராசசர் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி,  47000 mAh பேட்டரி ஆகிய அம்சங்கள் இருக்கலாம். கேமராவைப் பொறுத்தவரையில், பின்பக்கத்தில் ட்ரிபிள் கேமரா இருக்கலாம் என்றும், அதில் பிரைமரி கேமராவில் சோனி சென்சாருடன் 50 மெகா பிக்சல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முன்பக்கத்தில் 32 MP செல்ஃபி கேமரா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஒப்போ நிறுவனம் 240W மின்சக்தி கொண்ட சூப்பர் சார்ஜிங் ஸ்மார்ட்போனை தயாரித்து வருவதாகவும், அது 2024 ஆம் ஆண்டு அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.