இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது OnePlus 10T 5G..

 
OnePlus 10T 5G

OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாக  உள்ளது.

ஒன்பிளஸ் 10டி 5ஜி  ஸ்மார்ட் ஃபோன், சரியாக   இன்று  மலை 7.30 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.  நியூயார்க் நகரில் உள்ள கோதம்  ஹாலில் இதன் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.  OnePlus 10T 5G ஸ்மார்ட்போனில்,   ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் கொடுக்கப்படலாம் என்றும்,  6.7 இன்ச் அமோல்ட்  டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும்   எதிர்பார்க்கப்படுகிறது.   இவைதவிர பல்வேறு சிறப்பு  அம்சங்களை  வழங்க ஒன்பிளஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இந்த ஃபோன்   மூன்ஸ்டோன் பிளாக் மற்றும் ஜேட் கிரீன்  ஆகிய  நிறங்களில்  வெளியவரவுள்ளது.   

 OnePlus 10T 5G
இந்த ஒன்பிளஸ் 10டி 5ஜி மொபைலின்  விலை ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்து குத்துமதிப்பாக சொல்லப்படும் விலை நிலவரம் மட்டுமே தவிர , உண்மையான விலை என்னவாக  இருக்கும் என்பது தெரியவில்லை.  . ஆனால் இந்த போன் அதிக விலையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியாவில் இந்த  ஸ்மார்ட்போன்   மூன்று ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்படலாம்.  8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு கொண்ட இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் மாடல் ரூ.49,999-க்கும், அதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ.54,999 ஆகவும் இருக்கும். ஒன்பிளஸ் 10டி 5ஜியின் டாப் மாடல் 16ஜிபி ரேம் +  256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாடல் ரூ.55,999 விலையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.  

OnePlus 10T 5G

இதன் சிறப்பம்சங்கள் என்னவென்றால்,  OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கும்.  இதன் புதுப்பிப்பு விகிதம் 120 ஹெர்ட்ஸ் ஆகவும்,  இந்த ஃபோனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்  கொடுக்கப்பட்டிருக்கும்.  அத்துடன் இந்த போனில்  4800 எம்ஏஎச் பேட்டரியும்,  ஃபாஸ்ட்  சார்ஜிங்  வசதியும் இதில்   வழங்கப்படுகிறது. இதில், ஒன்பிளஸ் 10ஆர் போன்று 150வாட் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்க முடியும். அத்துடன் இதில் 3 கேமரா அமைப்பு  உள்ளது.  அதில்  முதன்மை சென்சாராக 50MP Sony IMX766 சென்சார் கொண்டிருக்கும். இந்த லென்ஸ் ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.