கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இது தானா? - வெளியான தகவல்

 
Google pixal 7a

கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

கூகுள் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். கூகுள் தேடுபொறி, இதன் முதன்மையான சேவை ஆகும். கூகுள் இணையத் தேடலுடன், கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் கூகுள் குரோம், கூகுள் சந்திப்பு, கூகுள் தொடர்புகள், கூகுள் செய்திகள், கூகுள் புகைப்படங்கள், கூகுள் டிரைவ், கூகுள் கோப்புகள், கூகுள் தாள்கள், கூகுள் விசைப்பலகை, கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற பல்வேறு சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இதேபோல் கூகுள், ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. இதுவரை கூகுள் பிக்சல், பிக்சல் 2, பிக்சல் 3, பிக்சல் 4, பிக்சல் 5, பிக்சல் 5a, கூகுள் பிக்சல் 6a உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருந்தது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து பிக்சல் 7 ஏ ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் வெளியிடவுள்ளது. 

Google pixal 7a

இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு வரும் நிலையில்,  இதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொருத்தவரை புதிய கூகுள் பிக்சல் 7a மாடலில் FHD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், டென்சார் G2 பிராசஸர், குவால்காம் சிப், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 64MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு சென்சார் என டூயல் கேமராக்கள், டூயல் சிம் ஸ்லாட்கள், 5ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.