சோஷியல் மீடியாக்களில் காதல் வசப்படும் இளைஞர்கள் உஷார்... அவர்கள் பெண்களே இல்ல..

 
சோஷியல் மீடியாக்களில் காதல் வசப்படும் இளைஞர்கள் உஷார்...  அது பெண்ணே இல்ல..

சமூக வலைத்தளங்களில் பல ரோமியோக்கள்,   அழகிய பெண்கள் என நினைத்து ரோபோக்கள் மீது காதல் வயப்பட்டுள்ளனர்.  

பிளாஸ்டிக் சார்ஜரியின் உலக தலைநகரம் என்று தென்கொரியாவை அழைப்பார்கள். நாடு முழுவதும்  மாடலிங் துறையில்,  சினிமா துறையில் இருக்கும் பல பெண்கள் தங்களது முக அழகுகளை மாற்றிக் கொள்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள தென்கொரியாவிற்கு செல்வதும் வழக்கம்.. நாகினி கதாநாயகி மௌனிராய், சமந்தா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டவர்கள் தான். 

சோஷியல் மீடியாக்களில் காதல் வசப்படும் இளைஞர்கள் உஷார்...  அது பெண்ணே இல்ல..

ஆனால் தற்போது தென்கொரியாவில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒரு படி மேலே சென்று,  கணினி தொழில்நுட்பங்களை கொண்டு பெண் மாடல் ரோபோக்களை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த ரோபோக்கள் பார்ப்பதற்கு   அச்சு அசலாக ஒரு  பெண்ணை போன்றே இருக்கின்றன.   இந்த ரோபோக்களுக்கு உயிர் மட்டுமே இருக்காது,  ஆனால் நாம் சொல்லும் அனைத்தையுமே அவை  கேட்கும்.

சினிமா துறையில் இருக்கும் பெரிய நடிகர்,  நடிகைகள் தங்களது  கால்ஷீட்டை  விளம்பர படங்களுக்கு ஒதுக்க முடிவதில்லை.  அதற்காக அவர்கள்  அதிக தொகைகள் பெறுவதும் உண்டு.  அப்படி இருந்தும் கூட  கூடுதல் நேரங்களுக்கு  நடிகர் , நடிகைகளிடம் வேலை வாங்க ,முடிவதில்லையாம்.  ஆகையால் இத்தகைய இடர்பாடுகளை களையவே இந்தப் பெண் ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.  இந்த ரோபோக்களை மாடலிங் துறையிலும்,  விளம்பர படங்களில் நடிப்பதற்காக பயன்படுத்தி வருவதாகவும்,  இதன் மூலம் கோடிக்கணக்கான பணம் புரல்வதாகவும்  கூறுகின்றனர்.

சோஷியல் மீடியாக்களில் காதல் வசப்படும் இளைஞர்கள் உஷார்...  அவர்கள் பெண்களே இல்ல..

இந்த அழகிய ரோபோ பெண்களுக்கு இன்ஸ்டகிராம், பேஸ்புக் என சமூக வலைதளங்களிலும் கணக்குகள் உள்ளன.  இவர்களை நிஜ பெண்கள் என நினைத்து ஏராளமான சமூக வலைதள ரோமியோக்கில் காதலில் விழுந்த வண்ணம் இருக்கின்றனர். இது போன்ற ரோபோக்கள் மீது காதல் வசப்படும் இளைஞர்கள், இவை ரோபோக்கள் என ஊடகங்களில் செய்திகள் வெளியான பின்னரும்  நம்ப மறுக்கின்றனர்.  தன்னுடன் பேசிக்கொண்டு இருக்கும் பெண்கள் ரோபோக்கள் என்பதை அறிந்த  பின்னர், பலர்  மன உளைச்சலுக்கு ஆளாக இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

சோஷியல் மீடியாக்களில் காதல் வசப்படும் இளைஞர்கள் உஷார்...  அவர்கள் பெண்களே இல்ல..

 மாடலிங் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த பெண் ரோபோக்கள், அழகு சாதன பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க வைத்து பல கோடி ரூபாய் லாபம் பார்ப்பதாக தென்கொரியா கூறுகிறது.  மாடலிங் மற்றும்  விளம்பர படங்களில் பயன்படுத்தப்பட பட்டு வரும் இந்த பெண் ரோபோக்களை, அடுத்த கட்டமாக சினிமாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளார்கலாம்.  அவ்வாறு சினிமாவில் நடிக்க வைக்கும் போது மக்களுக்கு இது ரோபோக்கள் என்கிற சந்தேகம் வந்துவிடக் கூடாது என்றும், ஒரு  பெண் நடிப்பது போன்று இருக்க வேண்டும் என்பதால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.  அவ்வாறு இந்த ரோபோக்களை ,  பெண்கள் தான் என்று மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டால் அதுதான் தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.  இதன் மூலம் பல ஆயிரம் கோடி வியாபாரங்கள் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.  

சோஷியல் மீடியாக்களில் காதல் வசப்படும் இளைஞர்கள் உஷார்...  அவர்கள் பெண்களே இல்ல..