108MP கேமராவுடன் அசத்தும் 5ஜி ஸ்மார்ட்ஃபோன்.. இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்53..

சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று அறிமுகமாகியிருக்கிறது. 108 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புதிய பிரீமியம் பட்ஜெட் ரக Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. அமேசான் மூலம் இதுகுறித்து அண்மையில் டீஸ் செய்திருந்தது. Samsung Galaxy M53 5G ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் அப்டேடட் வெர்ஷனாக இந்த மாடல் இருக்கும் என தெரிகிறது.
இந்த புதிய ஸ்மார்ட்போன், சாம்சங்கின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அமேசான் இந்தியா மூலம் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் MediaTek Dimensity 900 5G சிப்செட் நிறுவப்பட்டுள்ளதுடன், 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் , 108MP ( மெகா பிக்சல்) கேமரா , 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள Galaxy M53 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் ( ஏப்ரல் 22 ) இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டது.
சாம்சங் கேலக்ஸி எம்53 சிறப்பம்சங்கள் :
சாம்சங் Galaxy M53 5G போன் 6.7" அங்குல முழு அளவு (1,080x2,400 பிக்சல்கள்) HD பிளஸ் AMOLED திரையைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் சப்போர்ட்டும், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் உள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான One UI 4.1 ஸ்கின்னுடன். MediaTek டைமென்சிட்டி 900 5ஜி புராசஸர் கொண்டுள்ளது. இந்த போனில் அதிகபட்சமாக 8GB ரேம், 128GB வரை ஸ்டோரேஜ் நினைவகத்தை கொண்டிருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமராக்கள் கொண்ட குவாட் அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், 108MP மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 2MP மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவை அடங்கும். செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்க டிஸ்ப்ளே பஞ்ச் ஹோலில் 32MP மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5000mAh பேட்டரியும், 25W வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. USB Type-C போர்ட், ப்ளூடூத் 5.1, வைஃபை, இரட்டை 5ஜி சிம் போன்ற இணைப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் இந்த போனின் ஆரம்ப விலை ரூ.25,000 ஆக இருக்கலாம் என்றும், டாப் வேரியண்டின் விலை 30,000க்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.