ஆப்பிள் ஐபோன் 14 விலை என்ன தெரியுமா ? - முழு விவரம் இதோ!

 
iphone 14

ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் 14 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அதன் விலை மற்றும் நிறங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. 

ஆப்பிள் ஐபோன் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆடம்பரம் மற்றும் கௌரவம்தான். இந்த செல்போனை வைத்திருப்பவர்கள் சமூகத்தில் ஒரு மதிப்புள்ளவராக கருதப்படும் அளவிற்கு இந்த போனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.  இதுவரை ஐபோனில் பல்வேறு மாடல்கள் வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஐபோன் 14 மற்றும் 14 ப்ரோ குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது இந்த இரண்டு மாடல்களும் வருகிற செப்டம்பர் மாதம் 13ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விலை($799) இந்திய ரூபாய் மதிப்பின் படி 63,200 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

iphone 14

இதேபோல் ஐபோன் 14 மற்றும் 14 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் நிறங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது ஐபோன் 14 ஸ்மார்ட்போன் கருப்பு, புளு, பச்சை, பர்ப்பூல், சிகப்பு மற்றும் வெள்ளை என 6 நிறங்களில் வெளியாகவுள்ளது. இதேபோல் ஐபோன் 14 ப்ரோ ஸ்மார்ட்போன் கோல்ட், க்ரேபிட், பச்சை, பர்ப்பூல்,  மற்றும் சில்வர் ஆகிய 5 நிறங்களில் வெளியாகிறது. இதேபோல் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் 30W வயரிங் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IOS 16 தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 48 மெகாபிக்சல் ரியல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.06 இன்ச் அளவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.