1 நாளில் 1 லட்சம் புக்கிங்… உலக சாதனை புரிந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அப்படி என்ன இருக்கிறது?

1 நாளில் 1 லட்சம் புக்கிங்… உலக சாதனை புரிந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அப்படி என்ன இருக்கிறது?

இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உருவாக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்துவருகிறது. மத்திய அரசின் இந்த முடிவு நடப்பாண்டு பட்ஜெட்டிலும் எதிரொலித்தது. கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்கவும், கச்சா எண்ணெயின் தேவையைக் குறைக்கவும் பழைய இஞ்ஜின் பொறுத்தப்பட்ட வாகனங்களைக் குறைக்க புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். இது மின்சார வாகன பயன்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதி தான்.

1 நாளில் 1 லட்சம் புக்கிங்… உலக சாதனை புரிந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அப்படி என்ன இருக்கிறது?

இந்திய நிறுவனமான ஓலா, உபெர், பவுன்ஸ், வோகோ உள்ளிட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களை இந்தியாவில் தயாரித்துவருகின்றன. இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 1 சதவீதத்துக்கும் குறைவானதே. உலகத்திலேயே மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் நிறுவி வருகிறது. தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாக இங்கு தயாரிக்கப்படும் ஸ்கூட்டர்களின் மாடலை ஓலா நிறுவனம் வெளியிட்டது.

1 நாளில் 1 லட்சம் புக்கிங்… உலக சாதனை புரிந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அப்படி என்ன இருக்கிறது?

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்புபவர்கள் அதிகம் இருந்தாலும், அதன் விலை தலையைச் சுற்ற வைக்கிறது. அந்த வகையில் அவர்களின் தயக்கத்தை உடைக்க மிகவும் மலிவான விலையில் பல்வேறு அம்சங்கள் கொண்ட ஸ்கூட்டரை ஓலா தயாரித்து வருகிறது. இதன்மூலம் நிச்சயம் இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் புரட்சி ஏற்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்து வந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவில் உலக சாதனை புரிந்துள்ளது ஓலா. எஸ் புரட்சி தொடங்கிவிட்டது.

1 நாளில் 1 லட்சம் புக்கிங்… உலக சாதனை புரிந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அப்படி என்ன இருக்கிறது?

ஆம் நேற்று தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புபவர்கள் ரூ.499 கொடுத்து முன்பதவி செய்யுமாறு ஓலா அறிவித்திருந்தது. நேற்று அறிவித்த உடனே வாடிக்கையாளர்கள் ஓலாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மையல் கொண்டுவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் ஓலா ஸ்கூட்டருக்காக முன்பதிவு செய்து தெறிக்க விட்டுள்ளனர். இந்த முன்பணம் ஸ்கூட்டர் வாங்கும்போது திருப்பியளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளதும், ஏராளமானோர் முன்பதிவு செய்ய காரணம்.

1 நாளில் 1 லட்சம் புக்கிங்… உலக சாதனை புரிந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அப்படி என்ன இருக்கிறது?

இது குறுத்து ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் கூறுகையில், “எங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்குக் கிடைத்த வரவேற்பு எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் பெரும் ஆதரவு கொடுத்துள்ளனர். இது இந்திய மக்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து தங்களின் கவனத்தை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பக்கம் திருப்புகின்றனர் என்பதையே சுட்டிக்காட்டுகிறது” என்றார். சமீப மாதங்களாக பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போவது தான் மக்களின் வரவேற்புக்கு மிக முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

1 நாளில் 1 லட்சம் புக்கிங்… உலக சாதனை புரிந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அப்படி என்ன இருக்கிறது?

இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் இரண்டு ஹெல்மெட்களை வைத்துக் கொள்ளும் அளவில் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது. இதனுடன மொபைல் ஆப் சார்ந்து இயங்கும் keyless வசதி வழங்கப்படும் என்றும், இதில் ப்ளூடூத் இணைக்கும் அம்சம் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் தூரம் பயணிக்கலாம் என்றும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன, என்ன விலை போன்ற தகவல்களை ஓலா சஸ்பென்ஸாக வைத்துள்ளது.