உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து! போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர்கள்…

 

உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து! போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர்கள்…

கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் முதுகலை படிப்புகள் படிப்பர். அவர்கள் முதுகலை படிப்பை முடிக்கும் போது ஊக்க ஊதியம் வழங்கப்படும். ஒரு உயர் கல்வியை முடித்தால், மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை ஊக்க ஊதியம் வழங்கப்படும். திமுக ஆட்சியில்தான் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் அறிமுகப்படுத்தபட்டது. ஈட்டிய விடுப்பு நாட்களைச் சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வு நிலை ஊதியம், 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம் உள்ளிட்ட் பல்வேறு ஊதியங்கள் வழங்கப்பட்டன.

உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து! போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர்கள்…

இந்தநிலையில் 50 ஆண்டு காலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பு தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளது.