8 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப வேண்டும் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

 

8 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப வேண்டும் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 1091 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கத்தால் தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்ட 5ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

8 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப வேண்டும் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

இந்த ஊரடங்கினால் 2 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், ஜூன் மாதம் ஆரம்பித்துள்ள நிலையிலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து இன்னும் ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், வரும் 8 ஆம் தேதிக்குள் வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ள ஆசிரியர்கள் பணி செய்யும் மாவட்டத்துக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளும் பொதுத்தேர்வு மையமாக செயல்பட உள்ளதால் 6-ம் தேதி மாவட்ட CEO-க்கள் பள்ளிகளை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல, CEO ஆய்வின் போது அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிகளில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.