ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கல்வித்துறை ஆணையர் உத்தரவு

 

ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கல்வித்துறை ஆணையர் உத்தரவு

தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கல்வித்துறை ஆணையர் உத்தரவு

தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கியுள்ளன். இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமென ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பள்ளிகளில் பல்வேறு பணிகள் இருப்பதால் தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது 1 முதல் 12ஆம் வகுப்பு வரை 2020-21 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு EMIS_Portal-ல் தேர்ச்சி விவரங்களை உள்ளீடு செய்தல், 2021-22ஆம் கல்வியாண்டிற்கு அனைத்து தொடக்க நடுநிலை உயர்நிலை – மேல்நிலைப்பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் தொடங்க வேண்டும். 27 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களும், பிற ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் எனவும், கொரோனா தொற்று குறைந்த பிறகு 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் பள்ள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.