பள்ளி ஆசிரியைகள், மாணவர்களுக்கு கொரோனா! மூடப்படுமா பள்ளிகள்?

 

பள்ளி ஆசிரியைகள், மாணவர்களுக்கு கொரோனா! மூடப்படுமா பள்ளிகள்?

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியில் 2 பெண் ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பள்ளி ஆசிரியைகள், மாணவர்களுக்கு கொரோனா! மூடப்படுமா பள்ளிகள்?

தமிழக அரசு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்றது. தற்போது 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் நெய்வேலி வட்டம்- 17, வட்டம்- 28 ல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியில் பணியாற்றும் இரண்டு பெண் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாணவர் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்த ஆசிரியர்கள் நெய்வேலி என்.எல்.சி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக நாமக்கல் மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளி மாணவிகளுக்கும், அரியலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.