‘டியூஷன் படிக்கச் சென்ற குழந்தைகளுக்கு’ கொரோனா பரப்பிவிட்ட ஆசிரியர்!

‘டியூஷன் படிக்கச் சென்ற குழந்தைகளுக்கு’ கொரோனா பரப்பிவிட்ட ஆசிரியர்!

ஆந்திராவில் டியூஷன் படிக்க சென்ற மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மூலமாக கொரோனா பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர பிரதே மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் நரசராபேட்டையில் உள்ள பள்ளி ஒருவர், தனது வீட்டிலேயே டியூஷன் எடுத்து வந்திருக்கிறார். இவரது மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில், அவரிடம் இருந்து ஆசிரியருக்கும் தொற்று பரவியிருக்கிறது. இந்த நிலையில், அவரிடம் டியூஷன் படிக்க வந்த பட்லூரு கிராமத்தை சேர்ந்த 12 வயதுக்கு உட்பட்ட 14 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

‘டியூஷன் படிக்கச் சென்ற குழந்தைகளுக்கு’ கொரோனா பரப்பிவிட்ட ஆசிரியர்!

மாணவர்கள் மட்டும் அல்லாது அவர்களின் பெற்றோர்கள் ஒரு சிலருக்கும் கொரோனா அறிகுறி இருக்கிறதாம். இது குறித்து மருத்துவர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், குண்டூரில் இதுவரை கொரோனாவால் ஒருவர் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில் பாதிப்பு ஏதும் இல்லாமல் இருந்ததாகவும் தற்போது 14 குழந்தைகள் உட்பட 39 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

‘டியூஷன் படிக்கச் சென்ற குழந்தைகளுக்கு’ கொரோனா பரப்பிவிட்ட ஆசிரியர்!

இதனிடையே கொரோனா நெறிமுறைகளை மீறி, கொரோனா பாதிப்பு இருந்தும் டியூஷன் எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகம் ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அந்த குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.