மகளைக் கொலை செய்துவிட்டு ஆசிரியை தற்கொலை செய்தது ஏன்? – வெளிவராத அதிர்ச்சி தகவல்

சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்த பாலாஜி, அதே பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு மூன்று மகள்கள். அதில் மூன்றாவது மகள் தபித்தாலுக்கு 8 மாதம்தான் ஆகிறது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டாலும் மகள்களுக்காக வாழ்ந்தார் புவனேஸ்வரி. பாலாஜி, டைல்ஸ் ஓட்டும் வேலை செய்தாலும் குடிபோதைக்கு அடிமையானவர். அதனால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் மனைவி புவனேஸ்வரியை தகாத வார்த்தைகளால் பேசி திட்டிவந்துள்ளார்.

இந்தச் சூழலில்தான் புவனேஸ்வரி, தன்னுடைய 8 மாத குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்றார். 27-ம் தேதி புவனேஸ்வரியின் சடலம் சேக்காடு ஏரியிலிருந்து மீட்கபட்டது. குழந்தை தபித்தாலின் சடலத்தை போலீஸார் தேடிவந்தனர். 5 நாள்களுக்கு பிறகு ட்ரோன் மூலம் போலீஸார் குழந்தையின் சடலத்தை இன்று தேடினர். அப்போது ஏரியில் குழந்தையின் சடலம் போல ஒன்று மிதப்பதை ட்ரோன் படம் பிடித்து காட்டியது. உடனே அதை ஜூம் செய்த போலீஸார், அது குழந்தையின் சடலம் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் சடலம் மிதந்த இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர். புவனேஸ்வரியின் குடும்பத்தினர் அது தபித்தாலின் சடலம்தான் என உறுதிப்படுத்தினர். பின்னர் தபித்தாலின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தபித்தாலை கொலை செய்து விட்டு புவனேஸ்வரி தற்கொலை செய்திருக்கலாம் என ஆவடி போலீஸார் தெரிவித்தார். புவனேஸ்வரியின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என அவர் குடியிருந்த வீட்டின் அருகே சென்று விசாரித்தோம். புவனேஸ்வரி, ரொம்ப லவ் பண்ணி பாலாஜியை திருமணம் செய்து கொண்டாள். ரொம்பவே நல்ல பொண்ணு. வீட்டை விட்டு வெளியில் செல்லமாட்டாள். கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்கள். நைட்டுலதான் இருவரும் வாக்கிங் செல்வார்கள். போலீஸ் கூட இருவரையும் எச்சரித்துள்ளனர். சில நேரங்களில் தனக்குதானே பேசிக்கொள்வாள். அவள் இப்படியொரு முடிவை எடுப்பாள் என்று கனவில்கூட நினைக்கவில்லை. குழந்தையையும் அவள் கொலை செய்தது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது என்றாள் புவனேஸ்வரியின் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர்.

புவனேஸ்வரியின் தம்பி செல்வம், அக்காள் சடலத்தையும் நான்தான் அடையாளம் காட்டினேன். அக்காள் சடலம் கிடைத்தப்பிறகு பாப்பா தபித்தால் உயிரோடு இருக்க வேண்டும் என்று கடவுளிடம் பிராத்தனை செய்தேன். இன்று காலை போலீஸார் ட்ரோன் மூலம் குழந்தையை ஏரியில் தேடுவதாகக் கூறினார்கள். உடனே நானும் குடும்பத்தினரும் ஏரி கரையில் காத்திருந்தோம். அப்போது ஏரியில் குழந்தையின் சடலத்தைக் கண்டுபிடித்த போலீஸார் அதை மீட்டனர். பாப்பா தபித்தாலின் சடலத்தையும் நானே அடையாளம் காட்ட வேண்டியதாகிவிட்டது என்றார் கணணீர் மல்க.

ஆவடி போலீஸாரிடம் கேட்டதற்கு, “ஆசிரியை புவனேஸ்வரியைக் காணவில்லை என்று அவரின் தம்பி செல்வம் 27-ம் தேதிதான் புகார் கொடுத்தார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில்தான் புவனேஸ்வரி குழந்தையை தூக்கி கொண்டு வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். ஏரியில் புவனேஸ்வரி சடலம் மீட்கப்பட்டதும் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்தோம். குழந்தை குறித்த தகவல் கிடைக்கவில்லை. அதனால் புவனேஸ்வரியின் செல்போன் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். சிடிஎச் சாலையில் குழந்தையை தூக்கிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதனால் மீண்டும் புவனேஸ்வரி சடலம் கிடந்த ஏரியில் தேடினோம். அந்த ஏரி புதர் மண்டி கிடந்ததால் குழந்தையின் சடலத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

அதனால்தான் ட்ரோன் மூலம் ஏரியில் குழந்தையின் சடலத்தை தேடினோம். அப்போது குழந்தையின் சடலத்தை கண்டுபிடித்துள்ளோம். குழந்தையை முதலில் கொலை செய்துவிட்டு புவனேஸ்வரி தற்கொலை செய்திருப்பார் என சந்தேகிக்கிறோம். புவனேஸ்வரி எழுதியுள்ள கடிதம் மற்றும் அவர் குறித்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதுஎன்னவென்றால் சில ஆண்டுகளுக்கு முன் புவனேஸ்வரி தீக்குளித்துள்ளார். அப்போது அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. தீக்காய சிகிச்சையின் போது புவனேஸ்வரியிடம் டாக்டர்கள் சில அறிவுரைகளை கூறியுள்ளனர். அதில் முக்கியமாக நீ குழந்தை பெறுவது சிரமம். ஏனெனில் உன்னுடைய வயிறு பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. எனவே கவனமாக நடந்துக் கொள் என்று தெரிவித்துள்ளளனர். அதன்பிறகுதான் புவனேஸ்வரிக்கு குழந்தைகள் பிறந்துள்ளன. ஒவ்வொரு பிரசவத்தின்போது புவனேஸ்வரி உயிர் பிழைத்தது மறுபிறவி என்ற தகவல் கிடைத்துள்ளது.

உடல் அளவில் பாதிக்கபட்டிருந்த புவனேஸ்வரி, தன்னுடைய குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவர்களுக்காக தனக்கு நேர்ந்த கொடுமைகள், அவமானங்களை சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். அதில் சில சம்பவங்களை தன்னுடைய டைரியில் எழுதி வைத்துள்ளார். இந்தச் சமயத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பாலாஜி, தன்னுடைய மனைவி புவனேஸ்வரியை மற்றவர்கள் முன் கேவலமாக திட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்தச் சமயத்தில் அவர் சைக்கோ போல நடந்துள்ளார். இது புவனேஸ்வரியை மனதளவில் பாதிக்க வைத்துள்ளது. சமீபத்தில் நடந்த சண்டையில்கூட புவனேஸ்வரியை தகாத வார்த்தையால் தெருவில் வைத்து திட்டியுள்ளார். அது, புவனேஸ்வரியை விரக்தியடைய வைத்துள்ளது. அதனால்தான் புவனேஸ்வரி தன்னுடைய கைக்குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்”என்றனர்.

புவனேஸ்வரி, அவரின் கடைசி மகள் தபித்தால் ஆகியோர் உயிரிழந்துவிட மற்ற 2 மகள்கள் அம்மா எங்கே ஆயா, அப்பா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம்.

எஸ்.செல்வம்

Most Popular

#BREAKING: “ரூ.42 ஆயிரத்தை எட்டியது தங்க விலை”.. சவரனுக்கு ரூ.792 உயர்ந்து புதிய உச்சம்!

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக...

இந்தியாவிலேயே முதன் முறையாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற அம்மா கோவிட்19 வீட்டு பராமரிப்பு திட்டம்! – எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்

கொரோனா நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு என்ற சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார். தமிழக அரசின் கடும் நடவடிக்கை காரணமாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...

பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை 8.52 லட்சம் வழக்குகள் பதிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய...

மதுரையில் குறையும் கொரோனா பரவல் : அமைச்சர் உதயகுமார் தகவல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் மேலும் 95...