தரமான தேயிலை கொள்முதல் செய்ய தேயிலை வாரியம் சுற்றறிக்கை!

 

தரமான தேயிலை கொள்முதல் செய்ய தேயிலை வாரியம் சுற்றறிக்கை!

தேயிலை தொழிற்சாலையில் தரமான தேயிலை கொள்முதல் செய்ய தேயிலை வாரியம் சுற்றறிக்கை. அனுப்பியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள் 65,000 பேர் தேயிலை சாகுபடி செய்கின்றனர். தற்போது மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருவதால் தேயிலை மகசூல் அமோகமாக உள்ளது. தேயிலை பறிக்க தொழிலாளர்கள் பற்றாகுறையால் பசுந்தேயிலை இலைகள் தரம் குறைகிறது. மேலும் தேயிலை உற்பத்தியும் தரம் குறைகிறது.

தரமான தேயிலை கொள்முதல் செய்ய தேயிலை வாரியம் சுற்றறிக்கை!

இதனால் தேயிலை வாரியம் மாவட்டத்தில் உள்ள 110 தேயிலை தொழிற்சாலைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் 65 சதவீதம் முதல் தரம் இலை, 30 சதவிதம் இரண்டாம் தரம் இலை, 5 சதவீதம் மூன்றாம் தரம் இலை என கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். பசுந்தேயிலைக்கு கிலோ 30 ருபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.