ஜூன் காலாண்டில் ரூ.7,008 கோடி லாபம்… பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட்… நம்பிக்கை அளிக்கும் டி.சி.எஸ்.

ஜூன் காலாண்டில் ரூ.7,008 கோடி லாபம்… பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட்… நம்பிக்கை அளிக்கும் டி.சி.எஸ்.

நாட்டின முன்னணி ஐ.டி. சேவைகள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை நேற்று அறிவித்தது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பல கடந்த மார்ச் காலாண்டு முடிவுகளே வெளியிடாத நிலையில், டி.சி.எஸ். நிறுவனம் முதலாவதாக கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

ஜூன் காலாண்டில் ரூ.7,008 கோடி லாபம்… பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட்… நம்பிக்கை அளிக்கும் டி.சி.எஸ்.

டி.சி.எஸ். நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.7,008 கோடி ஈட்டியுள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் லாபமாக ரூ.8,131 கோடி ஈட்டியிருந்தது. ஆக, கடந்த ஜூன் காலாண்டில் டி.சி.எஸ். லாபம் 13.81 சதவீதம் குறைந்துள்ளது. 2020 ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.38,322 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜூன் காலாண்டில் ரூ.7,008 கோடி லாபம்… பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட்… நம்பிக்கை அளிக்கும் டி.சி.எஸ்.

லாக்டவுன் காலத்திலும் இந்நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டி.சி.எஸ். நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு இந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்குவதாக அறிவித்துள்ளது.