ஆந்திராவில் தையல்காரர்கள், சலூன் கடைக்காரர்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு நிலவி வருகிறது. மக்கள் கொரோனா பீதி காரணமாக வீடுகளில் முடங்கிப் போய் உள்ளனர். இதனால் எல்லா தொழில்களும் முடங்கிப் போய் உள்ளன. இவர்களுக்கு உதவிகள் வழங்கும்படி கோரிக்கைகள் எழுந்துவருகிறது.
இந்த நிலையில் ஆந்திராவில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெகன் மோகன் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சலவைத் தொழிலாளர்கள், சலூன் கடைக்காரர்கள், தையல் வேலை செய்பவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் 82 ஆயிரம் சலவைத் தொழிலாளிகள், 38 ஆயிரம் சலூன் கடைக்காரர்கள், 1.25 லட்சம் தையல்காரர்கள் என மொத்தம் 2.47 லட்சம் பேர் இதனால் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக ரூ.247 கோடியை ஜெகன் மோகன் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.