டெல்லியில் டீசல் மீதான வரி அதிரடி குறைப்பு! ரூ.8 வரை விலை குறைகிறது

டெல்லியில்  டீசல் மீதான வரி அதிரடி குறைப்பு! ரூ.8 வரை விலை குறைகிறது

டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30ல் இருந்து 15.75 சதவிகிதமாக குறைப்பது என்று டெல்லி மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு டீசல் விலை மிகப்பெரிய அளவில் குறைகிறது.

டெல்லியில்  டீசல் மீதான வரி அதிரடி குறைப்பு! ரூ.8 வரை விலை குறைகிறது
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விதிக்கும் வரிதான் காரணம் என்று கூறப்படுகிறது. வரி வருவாய்க்கு ஆசைப்படும் அரசுகள், மக்களுக்காக விலையைக் குறைக்க முன்வர மறுக்கின்றன.
இந்த நிலையில் டெல்லி மாநில அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க முடிவு

டெல்லியில்  டீசல் மீதான வரி அதிரடி குறைப்பு! ரூ.8 வரை விலை குறைகிறது

செய்துள்ளது. இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கூடிய டெல்லி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் டீசல் மீதான வாட் வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 16.75 சதவிகிதமாக குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் டெல்லியில் ரூ.82 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் ஒரு லிட்டர் டீசல் விலையில் ரூ.8.36 குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.