Home தமிழகம் "இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்" - அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டார்.

"இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்" - அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!
முறைகேடு தொடர்பாக ஆவின் அதிகாரிகளிடம் அமைச்சர் மூர்த்தி விசாரணை || Tamil  News Minister Moorthy inquires with Aavin officials regarding the abuse

இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 11 ஆண்டுகளுக்குப் பின் தற்போது வணிகர்களை நேரடியாக அழைத்து ஜிஎஸ்டி தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கேட்டு வருகிறோம். அந்தக் கருத்துக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ. 15 ஆயிரம் கோடி வர வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு விரிவிதிப்பு விதிவிலக்குகளை மாநில நிதியமைச்சர் கேட்டுள்ளார்.

goondas-for-tax-evaders-minister-warns

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு விதிவிலக்கு தர வேண்டும் என்பதை வலியுறுத்தியதால், 18 சதவீதமாக இருந்த வரி விதிப்பு தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் முடிந்தால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றார்.

"இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்" - அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஒலிம்பிக்ஸ் 2021: டென்னிஸில் நாக்அவுட்டாகி வெளியேறியது சானியா மிர்சா ஜோடி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 23ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல்களையும் தாண்டி சவாலுடன் ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுகிறது. 205 நாடுகளில் இருந்து 11,300 வீரர், வீராங்கனைகள்...

இளம்பெண் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு… கொடூரமாக கொலை செய்த இளைஞர்!

பட்டுக்கோட்டை அருகே ஒரு தலைக் காதல் விவகாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர்...

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; அதிர்ச்சி தரும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 535 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள்...

சிக்கினார் அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர்… சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!

போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது 55% அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்...
- Advertisment -
TopTamilNews