திரைத்துறைக்கு வரிச்சலுகை : மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

 

திரைத்துறைக்கு வரிச்சலுகை : மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

திரைத் துறையினருக்கு கேளிக்கை வரி ரத்து, மின் கட்டணம், சொத்து வரியில் தமிழக அரசு சலுகை வழங்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

திரைத்துறைக்கு வரிச்சலுகை : மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஒட்டுமொத்த நாடும் முடங்கியது. இதனால் பொதுமுடக்க உத்தரவிடப்பட்டது. ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன், பல்வேறு துறைகள் முடங்கின. குறிப்பாக தியேட்டர்கள், படப்பிடிப்புகள் என ஒட்டுமொத்த திரையுலகமே ஆட்டம் கண்டது.

திரைத்துறைக்கு வரிச்சலுகை : மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

இதை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இருப்பினும் கொரோனா பரவல் அச்சத்தால் மக்கள் கூட்டம் சொல்லும்படியாக வருவதில்லை .

திரைத்துறைக்கு வரிச்சலுகை : மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

இந்நிலையில்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில், கனவு தொழிற்சாலையான திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் மார்ச் மாதம் வரை உள்ளாட்சி கேளிக்கை வரி ரத்து, திரையரங்கம் மின் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி தரப்பட்டுள்ளது. சொத்து வரி செலுத்தவும் கேரள அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. கேரள அரசின் சலுகைகளை சுட்டிக்காட்டி தமிழக அரசு செயல்பட திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திரைத்துறை மட்டுமின்றி கொரோனவால் பாதிக்கப்பட்ட அனைத்து துறையினருக்கும் சலுகைகளை வழங்க கோரிக்கை வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.