Home ஆன்மிகம் அதிக வளர்ச்சியை அள்ளித்தரும் - ரிஷப ராசி

அதிக வளர்ச்சியை அள்ளித்தரும் – ரிஷப ராசி

குருபகவான் தனுசு ராசியிலிருந்து மகரத்துக்கு செல்லும் நிலையில், இந்த குருப்பெயர்ச்சி மக்களுக்கு எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

ரிஷப ராசியில் 8 ஆம் இடத்தில் இருந்த குரு பகவான் 9 இடத்துக்குச் செல்கிறார். இதனால் ரிஷப ராசி அன்பர்களுக்கு நல்ல பலன் உண்டாக உள்ளது. ”ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு” என ஒரு ஒரு பழமொழி சொல்வார்கள். அதற்கு ஓடிப் போனவர் என்று அர்த்தமல்ல, நன்றாக ஓடிக் கொண்டிருப்பவர் என்று அர்த்தம். ஓடிக்கொண்டிருப்பவரை குரு பார்ப்பார் என்கிற அர்த்தம் இதில் உள்ளது. அதாவது வளர்ச்சிக்கான நேரம், உங்களுக்கு அனைத்து விதமான பாக்கியங்களும் கொண்டு வந்து சேர்க்கும் நேரம். ஒன்பதாம் இடத்தில் குரு இருந்தால் ஒன்பதாம் இடத்தை கொடுப்பாரே, என்று கூறப்படுவதால், தந்தைக்கு அது சற்று சங்கடத்தை கொடுக்கும். ஆனால் அது செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால்உடல் ஆரோக்கியம் மேம்படும். இதுநாள் வரை தயங்கிக் கொண்டிருந்த தொழில் முயற்சிகளை மேற்கொள்ளலாம். முன்னேற்றங்கள் ஏற்படும்.
எல்லா தயக்கங்களையும் உடைத்து எந்த முயற்சியை மேற்கொள்ளலாம். குடும்பம் வாழ்க்கை, வேலை என எல்லாவிதமான முயற்சிகளையும் எடுப்பதற்கான நம்பிக்கையை குரு அளிக்க உள்ளார்.

அடுத்ததாக அவர் 5 ஆம் இடத்தை பார்ப்பதால், பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது . அதனால் வியாபாரம் உள்ளிட்டவை வலுப்பெறும். வியாபாரம் செய்யும் ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாபாரம் வளர்ச்சி அடையும். பணவரவு ஏற்படும். சந்தோஷம் அதிகரிக்கும். உடன்பிறந்த சகோதரர்களின் வளர்ச்சியை கண்டு பூரிப்படையும் நேரம். குறிப்பாக இளைய சகோதரர்கள், தம்பி தங்கைகள் நல்ல வளர்ச்சி அடைவார்கள். அவர்கள் வளர்ச்சியை கண்டு நீங்கள் பெருமைப்படும் நேரம். உங்களுக்கு உதவிகரமாக அவர்கள் இருப்பார்கள்.

உங்கள் ராசிக்கு குரு பார்வை இருப்பதால், வலது பக்க கண், காது பிரச்சினைகல் சரியாகும், தீர்வுகள் கிடைக்கும். வலது பக்கத்தில் தலையில் இருந்து இடுப்பு வரை உள்ள எல்லா பிரச்சினைகளும் தீரும். குறிப்பாக நவம்பர் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை பல விதமாக நன்மைகள் வந்து சேரும். இளம் ஆண், பெண்கள், குடும்பத்தலைவிகளிடம் பளபளப்பு உருவாகும். நிம்மதி தரும் மினுமினுப்பு வரும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும். உடல்நலப்பிரச்சினைகளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டிய நேரம். அதுதொடர்பான பண வரவும் ஏற்படும்.

குடும்ப ஸ்தானத்துக்கு விரய் ஸ்தானமான ஒன்றாம் இடத்தை பார்ப்பதால், குடும்பத்துக்கு தேவையான் செலவுகளை செய்யப் பொருட்களை வாங்கிக் கொடுப்பீருப்பீர். 3 ஆம் இடம் என்பதுபோல 4 ஆம் இடம் விரய ஸ்தானம் . வீடு மனை வாங்குவது, வண்டி மாற்றம் சாத்தியமாகும். இந்த குரு பெயர்ச்சியில், அதிக வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ள முதன்மையான ராசி ரிஷபம் என்பது குறிப்பிடத்தக்கது

மாவட்ட செய்திகள்

Most Popular

ஜெபி நட்டா வீட்டில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தடியடிக்கும், கண்ணீர் புகை குண்டுகளுக்கும் அஞ்சாமல் நடந்து வரும் இந்த போராட்டம்...

110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்

நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 110 விவசாயிகளை மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் கடத்திக்கொண்டு போய் அவர்களின் கை,கால்களை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அந்த...

திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி வழிபாடு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில், கார்த்திகை தீபத்தை ஒட்டி, கோயிலின் எதிரேயுள்ள பச்சரிசி மலையில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது. முருக பெருமானின் ஐந்தாம்...

ஆட்டத்தில் தோல்வி; ஆனால் காதலில் வெற்றி! ஆஸ்திரேலிய பெண்ணின் இதயம் கவர்ந்த இந்தியர்!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. மைதானத்தில் இரு அணிகளும் தீவிரமாக ஆடிக்கொண்டிருந்தனர். ஆனால் பார்வையாளர்கள் பகுதியில் வித்தியாசமான சம்பவம் நடந்தது. இந்திய கிரிக்கெட்...
Do NOT follow this link or you will be banned from the site!