கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களை தத்தெடுக்கும் டாடா ஸ்டீல் நிறுவனம்

கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களை தத்தெடுக்கும் டாடா ஸ்டீல் நிறுவனம்

இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, டெல்லி மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்படவில்லை. இந்தியாவில் நேற்று ஒரேநாளில்1,96,427 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 2,69,48,874 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 24மணிநேரத்தில் 3,511 பேர் கொரோனாவால் பலியானதையடுத்து மொத்த உயிரிழப்பு 3,07,231ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களை தத்தெடுக்கும் டாடா ஸ்டீல் நிறுவனம்

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்திற்கு பணி நிறைவு காலம் வரை முழு சம்பளம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழக்கும் குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படும் எனவும் அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச்செல்வை பட்டம் பெறும் வரை டாடா நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களை தத்தெடுக்கும் டாடா ஸ்டீல் நிறுவனம்