”பண்டிகை கால சிறப்பு வாகனக்கடன்” – எச்டிஎப்சி வங்கியுடன் டாடா மோட்டார்ஸ் கூட்டு

 

”பண்டிகை கால சிறப்பு வாகனக்கடன்” – எச்டிஎப்சி வங்கியுடன் டாடா மோட்டார்ஸ் கூட்டு

பண்டிகை காலத்தை முன்னிட்டு, கார்களுக்கு வாகனக்கடன் அளிப்பது தொடர்பாக எச்டிஎப்சி வங்கியுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, கிராடுயல் ஸ்டெப் அப் ஸ்கீம் மற்றும் டிஎம்எல் ஃபிளெக்ஸி டிரைவ் ஸ்கீம் என 2 வகை சிறப்பு திட்டங்களின் கீழ் எச்டிஎப்சி வங்கி கடன் வழங்கும் என தெரிகிறது.

”பண்டிகை கால சிறப்பு வாகனக்கடன்” – எச்டிஎப்சி வங்கியுடன் டாடா மோட்டார்ஸ் கூட்டு

முதல் திட்டத்தின் படி, வாடிக்கையாளர்கள் ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு குறைந்தபட்சம் 799 ரூபாய் என்ற மாதத்தவணையை தேர்வு செய்து செலுத்த தொடங்கி, பின்னர் 2 ஆண்டுகளுக்குள் இஎம்ஐ-யை அதிகரித்துக்கொள்ளலாம் என தெரிகிறது.

இரண்டாம் திட்டமான ஃபிளக்ஸி டிரைவ் கடன் திட்டத்தின் படி, வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு விருப்பமான ஏதோ 3 மாதங்களை தேர்வு செய்து இஎம்ஐ தொகையை செலுத்தலாம் என தெரிகிறது. இந்த திட்டத்தின் படியும், குறைந்தபட்ச இஎம்ஐ தொகையான ஒரு லட்ச ரூபாய்க்கு 799 ரூபாய் என்ற இஎம்ஐ வீதம் மாதாந்திர தவணையை தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் தெரியவந்துள்ளது.

”பண்டிகை கால சிறப்பு வாகனக்கடன்” – எச்டிஎப்சி வங்கியுடன் டாடா மோட்டார்ஸ் கூட்டு

பண்டிகை கால சிறப்பு சலுகையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கடன் திட்டங்களின் கீழ், வாடிக்கையாளர்கள் நவம்பர் மாதம் முடிய கார்களை வாங்கிக்கொள்ளலாம் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கடன் திட்டங்களின் கீழ், நிறுவனத்தின் அனைத்து பிஎஸ்- 4 ரக கார்கள் மற்றும் எஸ்யுவி ரக வாகனங்களை வாடிக்கையாளர்கள் வாங்கலாம் என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்