மதுபானக் கடைகளை மூடவே கூடாது! – கார்த்தி சிதம்பரத்தின் யோசனை

 

மதுபானக் கடைகளை மூடவே கூடாது! – கார்த்தி சிதம்பரத்தின் யோசனை

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ள ஆலோசனை கண்டனத்தைக் குவித்து வருகிறது.

மதுபானக் கடைகளை மூடவே கூடாது! – கார்த்தி சிதம்பரத்தின் யோசனை
சென்னையில் கொரோனாத் தொற்று எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. 1000க்கு கீழ் சென்ற எண்ணிக்கை தற்போது மீண்டும் 1000ஐ தாண்டியுள்ளது. ஆனாலும் கொரோனா குறைந்துவிட்டது என்று கூறப்படுகிறது.
இதைக் காரணமாக வைத்து சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறையாத நிலையில் தமிழக அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது மோசமான செயல் என்று பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மதுபானக் கடைகளை மூடவே கூடாது! – கார்த்தி சிதம்பரத்தின் யோசனை
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தன் பங்குக்கு கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். மதுக்கடைகளை மூட வேண்டாம். மதுபானக் கடைகளை ஒரு போதும் மூடக்கூடாது. மாறாக ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். முழு மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று அனைவரும் கோரி வரும் நிலையில், மதுக்கடைகளை மூடவேக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ள கார்த்திக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.