கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.189 கோடிக்கு விற்பனை!

கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.189 கோடிக்கு விற்பனை!

கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.189 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.189 கோடிக்கு விற்பனை!
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. வாரத்தில் ஆறு நாளும் மக்களை சுதந்திரமாக இருக்கவிட்டு, ஒரே ஒரு நாள் கறிக்கடையில் கூட்டம் கூடுவதைத் தடுத்தால் கொரோனா பரவலைத் தடுத்துவிடலாம் என்ற வகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அமலில் உள்ளது.

கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.189 கோடிக்கு விற்பனை!
முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதால் குடி மகன்கள் முந்தைய நாள் சனிக்கிழமையே போட்டிப் போட்டு தங்களுக்கு விருப்பமான மது வகைகளை வாங்கி வைத்துவிடுகின்றனர். வேலையின்மை, ஊதிய குறைப்பு என்று பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் டாஸ்மாக் கடைகளில் பணத்தைக் கொடுப்பதை மட்டும் குடி மகன்கள் நிறுத்துவது இல்லை என்பது அங்கு நடந்து வரும் விற்பனையைப் பார்த்தாலே தெரிகிறது.

கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.189 கோடிக்கு விற்பனை!
கடந்த சனிக்கிழமை மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.189.43 கோடி அளவுக்கு மது பானம் விற்பனையாகி உள்ளது. இதில் முதல் இடத்தை மதுரை மண்டலம் பிடித்துள்ளது. அங்கு ரூ.44.55 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. திருச்சி மண்டலத்தில் 41.59 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.41.2 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.39.45 கோடியும், சென்னை மண்டலத்தில் ரூ.22.56 கோடிக்கும் மது பாட்டல் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.