மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி : இந்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!

 

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி : இந்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!

ஜனவரி மாதத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் இயங்காது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி : இந்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!

கொரோனா பொதுமுடக்கத்தின் போது, டாஸ்மாக் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. அச்சமயம் அரசுக்கு ஏற்பட்ட, வருவாய் இழப்பால் மீண்டும் டாஸ்மாக் திறக்கப்பட்டது. திறந்த ஒரு சில நாட்களில், இதுவரை இல்லாத அளவுக்கு டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அண்மையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுக்கு வருவாய் அதிகமாக கிடைத்ததாக டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி : இந்த 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!

புத்தாண்டுக்கு முன் தினம், அதாவது 31ம் தேதியன்று ரூ.159 கோடி வருவாய் கிடைத்ததாகவும் புத்தாண்டு அன்று ரூ.137 கோடி வருவாய் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு டாஸ்மாக் கடைகளில் பண மழை கொட்டும் நிலையில், ஜன.15, 26 மற்றும் 28ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி அந்த 3 நாட்கள் டாஸ்மாக் இயங்காது என்று குறிப்பிட்டுள்ளது.