3 நாட்களுக்கு லீவு…டாஸ்மாக் கடைகளில் அட்டூழியம் செய்யும் ‘குடி’மகன்கள்!

 

3 நாட்களுக்கு லீவு…டாஸ்மாக் கடைகளில் அட்டூழியம் செய்யும் ‘குடி’மகன்கள்!

சட்டமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் லீவு என்பதால் குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.

3 நாட்களுக்கு லீவு…டாஸ்மாக் கடைகளில் அட்டூழியம் செய்யும் ‘குடி’மகன்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி இன்று முதல் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றுமுதலே குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் அலைமோத ஆரம்பித்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் வழிய தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமலும்
மக்கள் ஒருவர் மீது ஒருவர் மீது மோதியவாறு மதுபானங்களை வாங்கி கொண்டு சென்றனர்.

3 நாட்களுக்கு லீவு…டாஸ்மாக் கடைகளில் அட்டூழியம் செய்யும் ‘குடி’மகன்கள்!

கடலூரில் இரவு கடை மூடும் வரை கூட்டம் அலைமோதியதால் அங்கு போலீஸ் பாதுகாப்புடன் மதுபானங்கள் விற்கப்பட்டது. புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே இரவு 10 மணியை தாண்டியும் மதுவிற்பனை செய்யப்பட்டதால் போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டியில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால் 1,500 குவார்ட்டர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நிலையில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துடன் குருசாமி, ராமர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.அத்துடன் தாராபுரம் செல்லும் சாலையில் வடுகபாளையம் என்ற இடத்தில் 480 மதுபாட்டில்கள் காரில் கடத்தப்பட்ட நிலையில் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் வேலூரிலும் 250 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.