தஞ்சையின் ‘மனிதநேய மருத்துவர்’ மரு.குமார் காலமானார்!

 

தஞ்சையின் ‘மனிதநேய மருத்துவர்’ மரு.குமார் காலமானார்!

தஞ்சையில் பிரபல மருத்துவர் மரு. குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

தஞ்சையில் ‘ராமநாதன்’ மருத்துவமனை என்றால் டெல்டா மாவட்டங்களில் அறியாதவர்கள் கிடையாது. மூன்று தலைமுறைகளாக , 90 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான ஏழை எளியமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளது இவரது குடும்பம்.

தஞ்சையின் ‘மனிதநேய மருத்துவர்’ மரு.குமார் காலமானார்!

புன்னகை பூத்த முகம், நோயாளர்களை கனிவோடு அணுகுகிற இயல்பு, மாத்திரைகளால் மட்டுமல்ல நம்பிக்கை வார்த்தைகளாலும் குணப்படுத்துகிற யுக்தி, தரம்பிரிக்காமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கவனிப்பு என மருத்துவ துறையின் நேர்மையாளராக வாழ்ந்தவர் மரு. குமார்.

தஞ்சையின் ‘மனிதநேய மருத்துவர்’ மரு.குமார் காலமானார்!

தனது தந்தை மரு.ராமநாதன் போலவே மருத்துவத்தை சேவையாகக் கருதி செய்து வந்த இவர் கொரோனா காலத்திலும் அச்சம் கொள்ளமல் தொடர்ந்து ஏழை எளியோர்க்கு மருத்துவம் அளித்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர் மரு. குமாரின் மரணம் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தஞ்சை மாவட்டத்திற்கும் அதிர்ச்சியையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.