தஞ்சை மாநகராட்சி கடைகள் பொது ஏலத்திற்கு எதிராக வணிகர்கள் சாலை மறியல் போராட்டம்!

 

தஞ்சை மாநகராட்சி கடைகள் பொது ஏலத்திற்கு எதிராக வணிகர்கள் சாலை மறியல் போராட்டம்!

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் முறையாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டி வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிறுத்தம் இடிக்கப்பட்டு அங்கிருந்த கடைகளும் அகற்றப்பட்டது. அங்கு, ரூ.14 கோடி மதிப்பில் புதிதாக பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள், என சுமார் 85 கடைகள் கட்டப்பட்டு உள்ளன. கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

தஞ்சை மாநகராட்சி கடைகள் பொது ஏலத்திற்கு எதிராக வணிகர்கள் சாலை மறியல் போராட்டம்!

இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை ஏலம் விடுவதற்கான, பொது ஏலம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஏலத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அப்போது, பொது ஏலம் முறையாக நடைபெற வில்லை என்று குற்றம்சாட்டி, பேருந்து நிலையத்தில் ஏற்கனவே கடை வைத்திருந்த வணிகர்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மாநகராட்சி ஆணையரை கண்டித்து கோஷம் எழுப்பியடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வணிகர்களுக்கு ஆதரவாக, அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்து கலைந்துபோக செய்தனர். வணிகர்கள் போராட்டம் காரணமாக தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.