சனி பிரதோஷ விழா- சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

 

சனி பிரதோஷ விழா- சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சனிப் பிரதோஷத்தையொட்டி நேற்று தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆதாரனைகள் நடைபெற்றது.

சனி பிரதோஷ விழா- சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற்ற சனிப் பிரதோஷ நிகழ்ச்சியில், நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், திரவிய பொடி, தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள முழங்க, ஓதுவார்கள் திருமுறை ஓத, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இறுதியாக பெருவுடையாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆண்டின் கடைசி சனிப்பிரதோஷம் என்பதால் இந்த நிகழ்ச்சியை காண கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, தரிசனம் செய்து வழிபட்டனர்.

சனி பிரதோஷ விழா- சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சனிப் பிரதோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீசந்திரசேகரர்- கௌரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து, ஸ்ரீசந்திரசேகரர் – கௌரி அம்பாள் மரப் பல்லாக்கில் எழுந்தருளி, மங்கள வாத்தியங்கள் முழங்க மூன்றாம் பிரகாரத்தில் பவனி வந்து, பின் ராமநாத சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

சனி பிரதோஷ விழா- சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

இறுதியாக, ராமநாத சுவாமி சன்னதியின் முன்பு உள்ள 18 அடி உயரமுள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரதோஷ நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.