அதிகமாலாம் வாங்கல…. மின் கட்டண கணக்கீட்டை இந்த இணையதளத்தில் போய் பாருங்க!- மின் வாரியம்

 

அதிகமாலாம் வாங்கல…. மின் கட்டண கணக்கீட்டை இந்த இணையதளத்தில் போய் பாருங்க!- மின் வாரியம்

கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வீடு வீடாக சென்று மின்சார கணக்கீடு செய்ய முடியவில்லை. இதனால் முந்தைய மாத கட்டணத்தையே செலுத்த மின்சார வாரியம் அறிவுறுத்தியது. அதற்கு அடுத்த மாதம் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் குளறுபடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. பலருக்கும் பல ஆயிரம் ரூபாய் வித்தியாசம் வந்தது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வசூலிப்பதை விட அதிகமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

அதிகமாலாம் வாங்கல…. மின் கட்டண கணக்கீட்டை இந்த இணையதளத்தில் போய் பாருங்க!- மின் வாரியம்

இந்நிலையில் வீட்டு மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் கட்டண விவரங்களை டான்ஜெட்கோ இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமுடக்கத்தையொட்டி, முந்தைய மாத மின் கட்டண தொகையையே கணக்கீடு செய்யப்பட்டுள்ள நுகர்வோர் பின்னர் அடுத்த கணக்கீட்டில் மொத்த தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பதை WWW.TANGEDCO.GOV.IN என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் சென்று மின் கட்டண சேவைகள் என்ற லிங்கில், கணக்கிடப்பட்ட விவரங்களை பார்த்து கொள்ளலாம் என்றும், இதில் சந்தேகமிருப்பின் சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.