‘அதிக வாக்குப்பதிவான’ தென் மாவட்டங்கள் : விவரம் இதோ!!

 

‘அதிக வாக்குப்பதிவான’ தென் மாவட்டங்கள் : விவரம் இதோ!!

தமிழக சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக நடந்து முடிந்தது. 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் முடிந்த கையோடு சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு செய்து 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குப்பதிவே பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92% வாக்குகள் பதிவாகியுள்ளது.

அந்த வகையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகியவை தென் மாவட்டங்களாகும். மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 58 தொகுதிகள் தென் மாவட்டங்களில் அமைந்திருக்கின்றன. இதில் மதுரையில் அதிகப்படியாக 10 தொகுதிகளும், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 7 தொகுதிகளும் அமைந்துள்ளன.

‘அதிக வாக்குப்பதிவான’ தென் மாவட்டங்கள் : விவரம் இதோ!!

மதுரை கிழக்கு தொகுதியில் 71.32 சதவீதமும். மதுரை வடக்கு தொகுதியில் 63.58 சதவீதமும் , மதுரை தெற்கு தொகுதியில் 63.8 சதவீதமும், மதுரை மத்திய தொகுதியில் 61.21 சதவீதமும், மதுரை மேற்கு தொகுதியில் 65.15 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. திருமயம் தொகுதியில் 75.89 சதவீதமும், ஆலங்குடி தொகுதியில் 78.44 சதவீதமும், காரைக்குடியில் 66.22 சதவீதமும், திருப்பத்தூரில் 72.01 சதவீதமும், சிவகங்கையில் 65.66 சதவீதமும், மானாமதுரையில் 71. 87 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

‘அதிக வாக்குப்பதிவான’ தென் மாவட்டங்கள் : விவரம் இதோ!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் 70.51 சதவீதமும், திருவாடானையில் 68.5 சதவீதமும் , ராமநாதபுரத்தில் 68.5 7 சதவீதமும் ,முதுகுளத்தூரில் 6.38 சதவீதமும் வாக்கு பதிவாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்பட்டி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.தேனி தொகுதியில் ஆண்டிபட்டி 73.97 சதவீதமும், பெரியகுளத்தில் 69.13 சதவீதமும் , போடிநாயக்கனூரில் 73.65 சதவீதமும், கம்பத்தில் 69.57 சதவீதமும் வாக்கு பதிவாகியுள்ளது.

‘அதிக வாக்குப்பதிவான’ தென் மாவட்டங்கள் : விவரம் இதோ!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி ,ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, மற்றும் நத்தம் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இதில் பழனியில் 73.11 சதவீதமும், ஒட்டன்சத்திரத்தில் 85.9 சதவீதமும் , ஆத்தூரில் 77.22 சதவீதமும், நிலக்கோட்டையில் 75.58 சதவீதமும், நத்தத்தில் 79.7 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் தொகுதியில் – 72.05 சதவீதம், நாங்குநேரி தொகுதியில் – 68.06சதவீதம், பாளையங்கோட்டை- தொகுதியில் 57.76 சதவீதம், ராதாபுரம்- தொகுதியில் 67.94 சதவீதம் , திருநெல்வேலி தொகுதியில் – 66.09 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் சராசரியாக 61.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் தொகுதியில் 71.47 சதவீதம், கடையநல்லூர் தொகுதியில் 70.06 சதவீதம், தென்காசி தொகுதியில் 72.33 சதவீதம், ஆலங்குளம் தொகுதியில் 77.4 சதவீதம் வாக்குகள் பதிவாகின.