“கருணாநிதி போல எங்களை அரவணைத்து ஆட்சி செய்யுங்கள்” – முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த கோரிக்கை!

“கருணாநிதி போல எங்களை அரவணைத்து ஆட்சி செய்யுங்கள்” – முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த கோரிக்கை!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவிக்கு வந்த உடனே ஐந்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து அதனை இன்றே செயல்படுத்தி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். அவரிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.

“கருணாநிதி போல எங்களை அரவணைத்து ஆட்சி செய்யுங்கள்” – முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த கோரிக்கை!

அந்த அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வணிகர் நலவாரியம் அமைத்து வணிகர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடம் பல்வேறு ஆலோசனைகளைப் பெற்று மக்களாட்சி நடத்தினார். கருணாநிதி அரசின் எழுச்சி, அவரது புதல்வர் மு.க.ஸ்டாலினால் மீண்டும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதியதோர் அரசியல் விடியல் ஏற்பட்டுள்ளதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வாழ்த்தி மகிழ்கிறது.

“கருணாநிதி போல எங்களை அரவணைத்து ஆட்சி செய்யுங்கள்” – முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த கோரிக்கை!

வணிகர் நலன் காக்க வேண்டும். தந்தை வழியில் வணிகர் நலனோடு மக்கள் நலனையும் காத்து, மாபெரும் சாதனை படைத்து, மாநிலப் பொருளாதாரத்தை பின்னடைவிலிருந்து மீட்க வேண்டும். வணிக உறவுகளையும், கருணாநிதி போல அரவணைத்து, வணிகர்கள் மற்றும் அவர்களது ஊழியர்கள் வாழ்விலும் புதிய விடியலுக்கு வித்திட வேண்டும். அதன் மூலம் தமிழக வணிகர்களின் நலனைக் காக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.