அதுலயும் தமிழ்நாடு தான் பெஸ்ட் – சத்தமில்லாமல் படைத்த மற்றுமொரு சாதனை!

அதுலயும் தமிழ்நாடு தான் பெஸ்ட் – சத்தமில்லாமல் படைத்த மற்றுமொரு சாதனை!

சாலை விபத்துகளை 25 சதவிகிதத்துக்கும் கீழ் குறைத்து இந்தியாவிலேயே சிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருப்பதாக உலக வங்கி பாராட்டியுள்ளது.

அதுலயும் தமிழ்நாடு தான் பெஸ்ட் – சத்தமில்லாமல் படைத்த மற்றுமொரு சாதனை!

‘சாலை விபத்துகளில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் குறைபாடுகள்: இந்திய சமுகத்தின் மீதான பெருஞ்சுமை’ என்ற தலைப்பின் கீழ் உலக வங்கியும் சேவ்லைப் என்ற தனியார் அறக்கட்டளையும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசம், பிகார், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொண்ட ஆய்வின்படி இத்தகவல் தெரியவந்துள்ளது.

அதுலயும் தமிழ்நாடு தான் பெஸ்ட் – சத்தமில்லாமல் படைத்த மற்றுமொரு சாதனை!
அதுலயும் தமிழ்நாடு தான் பெஸ்ட் – சத்தமில்லாமல் படைத்த மற்றுமொரு சாதனை!

இந்த அறிக்கை குறித்து உலக வங்கியின் தெற்காசிய துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாபெர் மேலும் விவரித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், “உலகிலுள்ள வாகனங்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 1 சதவிகித வாகனங்கள் இருக்கின்றன. ஆனால், அப்படியிருந்தும் உலகில் ஏற்படும் சாலை விபத்துகளில் 10 சதவிகிதம் இந்தியாவில் தான் நிகழ்கின்றன. இது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதேசமயம் இதனைக் கருத்தில்கொண்டு இந்திய அரசு செயலாற்ற வேண்டும். ஆனால் சில மாநிலங்கள் சாலை விபத்துகளைக் குறைத்துள்ளன. தமிழ்நாடு 25 சதவிகிதம் வரை சாலை விபத்து உயிரிழப்புகளைக் குறைத்திருப்பது பாராட்டுக்குரியது.

அதுலயும் தமிழ்நாடு தான் பெஸ்ட் – சத்தமில்லாமல் படைத்த மற்றுமொரு சாதனை!

கொரோனா லாக்டவுனால் போக்குவரத்து குறைந்தாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. இப்போது கூட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 10 சதவிகிதம் பேர் விபத்தால் சிகிச்சை பெறுபவர்கள் தான் இருக்கிறார்கள். அதேபோல சமூக பொருளாதார வர்க்கத்தின் தாக்கம் சாலை விபத்துகளிலும் எதிரொலிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படியென்றால் சாலை விபத்துகளில் அதிகமாகப் பாதிக்கப்படுவது ஏழை மக்களே. பணபலம் படைத்தவர்களின் எண்ணிக்கை சொற்பமே” என்கிறார்.