அமலுக்கு வந்தன புதிய ஊரடங்கு தளர்வுகள்!

 

அமலுக்கு வந்தன புதிய ஊரடங்கு தளர்வுகள்!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. அந்த வகையில் கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து சேவை நள்ளிரவு முதல் தொடங்கியது.

அமலுக்கு வந்தன புதிய ஊரடங்கு தளர்வுகள்!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ் நாட்டில் நடைமுறையில் இருந்த ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய் தொற்று பரவும் தன்மை , அண்டை மாநிலங்களில் நோய் தொற்றும் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கையினை செயலாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அமலுக்கு வந்தன புதிய ஊரடங்கு தளர்வுகள்!

இந்த ஆலோசனை கூட்டத்தில் கடந்த முறை எடுக்கப்பட்ட முடிவுகள் நோய்தொற்று நிலையில் நடவடிக்கை எடுக்கவேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அமலுக்கு வந்தன புதிய ஊரடங்கு தளர்வுகள்!

அதன்படி வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடைகள் இன்று முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 50 சதவீத வாடிக்கையாளர்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கடற்கரையில் பொதுமக்கள் இனி அனுமதிக்கப்படுவர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்படும் நடைமுறை உள்ளிட்டவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.