“அதிகரித்த கொரோனா ; மீண்டும் முழு ஊரடங்கா? ” : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

“அதிகரித்த கொரோனா ; மீண்டும் முழு ஊரடங்கா? ” : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்துக்கு இந்த மாதம் 29 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“அதிகரித்த கொரோனா ; மீண்டும் முழு ஊரடங்கா? ” : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 4,10,353 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 65 ஆயிரத்து 452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34ஆயிரத்து 159 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கொரோனாவிலிருந்து மீள தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்று சொல்லப்படும் நிலையில் இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 62,53,741 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுவரை நாட்டில் மொத்தம் 48,52,86,570 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 2வது டோஸ் செலுத்தி கொள்பவர்களுக்கு மட்டுமே போட்டு வருகிறது.

“அதிகரித்த கொரோனா ; மீண்டும் முழு ஊரடங்கா? ” : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்துக்கு இந்த மாதம் 29 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்ற கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது” என்றார்.