நாளை முதல் ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதி.. ஆனால் இங்கு மட்டும் கிடையாது!

 

நாளை முதல் ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதி.. ஆனால் இங்கு மட்டும் கிடையாது!

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பினும், மக்களின் நிலையை கருத்தில் கொண்டு 34 வகையான கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் 4 ஆவது முறையாக ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலையில், சிவப்பு மண்டலங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 200 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் தேவை பட்டால் பேருந்து சேவையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்டோ, ரிக்‌ஷா உள்ளிட்ட வாகனங்களை இயக்க அரசு அனுமதிக்கவில்லை.

நாளை முதல் ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதி.. ஆனால் இங்கு மட்டும் கிடையாது!

இந்நிலையில் ஆட்டோ, ரிக்‌ஷா உள்ளிட்டவை நாளை முதல் சில நிபந்தனைகளுடன் இயங்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையை தவிர பிற இடங்களில் ஆட்டோக்களை இயக்கலாம் என்றும் ஒரே ஒரு பயணியுடன் மட்டும் தான் ஆட்டோக்கள் இயங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே ஆட்டோக்களை இயங்க அனுமதி வழங்கப்படுவதாகவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.