பி.எம் கேரில் இருந்து தமிழகத்துக்கு ரூ.83 கோடி!

 

பி.எம் கேரில் இருந்து தமிழகத்துக்கு ரூ.83 கோடி!

தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ ரூ.83 கோடி ரூபாயை பிஎம் கேர் உதவித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தென்பட ஆரம்பித்த நிலையில் மக்களிடமிருந்து நன்கொடை திரட்ட புதிதாக பிஎம் கேர் என்ற நிதி உதவித் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். பல முன்னணி தொழிலதிபர்கள், திரை உலக நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் இதற்கு நிதியை வாரி வழங்கின. ஆனால், இந்த நிதி எதற்காகப் பயன்படுத்தப்பட உள்ளது என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்தன.

பி.எம் கேரில் இருந்து தமிழகத்துக்கு ரூ.83 கோடி!

வென்டிலேட்டர் வாங்க, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் செயல்படும் பல முன்னணி நிறுவனங்களும் பிஎம் கேர்ஸ்க்கு பல கோடியை வழங்கியுள்ளன. தமிழகத்தின் பங்களிப்பே சில நூறு கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிஎம் கேர்-ல் இருந்து தமிழகத்துக்கு 83 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிதியைப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது